உம்மை நான் போற்றுகின்றேன் இறைவா
உம்மை நான் புகழ்கின்றேன் தேவா
போற்றி புகழ்கிறேன்
வாழ்த்தி வணங்குகிறேன்
1.
என்னைக் கைதூக்கிவிட்டீர்
எதிரியின் மேல் வெற்றி த்ந்தீர்
உதவி தேடி வந்தேன்
உடல் சுகம் த்ந்தீரய்யா ஆஆ
புகழ்ந்து பாடுவேன் (வோம்)
மகிழ்ந்து கொண்டடுவேன் (வோம்)
2.
மாலைநேரம் அழுகையென்றால்,
காலைநேரம் ஆனந்தமே
நொடிப்பொழுது உந்தன் கோபம்,
தயவோ வாழ்நாளெல்லாம். – புகழ்ந்து
3.
என் உள்ளம் புகழ்ந்து பாடும்,
இனி மெளனமாய் இருப்பதில்லை
கர்த்தாவே என் தெய்வமமே
கரம்பிடித்த மெய் தீபமே – புகழ்ந்து
4.
சாக்கு துணி களைந்துவிட்டீர்
மகிழ்ச்சி உடை உடுத்திவிட்டீர்
புலம்பலை நீக்கிவிட்டீர்,
புதுப்பாடல் நாவில் வைத்தீர், – புகழ்ந்து
5.
மலைபோல நிற்கச் செய்தீர்,
மாவேந்தன் உம் அன்பினால்
நிலைகலங்கி போனேன் ஐயா,
நின் முகம் மறைந்தபோது – புகழ்ந்து
6.
புழுதி உம்மை புகழ முடியுமா?
சத்தியம் சொல்ல அதனால் இயலுமா?
என் மீது இரங்கும் ஐயா,
எனக்குத் துணையாய் இரும், – புகழ்ந்து